மெக்ஸிக்கோவில் 13 வயதுடைய அமெரிக்காவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக சிறுவனின் தந்தையும், அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க எல்லைக்கு அருகே அமைந்துள்ள மெக்ஸிக்கோவின் ‘Tamaulipas’ என்ற மாநிலத்திலேயே இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக 41 வயதுடைய தனது மனைவியும், 11 வயதுடைய மேலும் ஒரு மகனும், 48 வயதான மைத்துனரும் காயமடைந்து, நியூவோ லாரெடோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

விமுறைக் காலத்தை மெக்ஸிக்கோவில் கழித்து விட்டு இரண்டு அமெரிக்கா நோக்கி திரும்பும் வேளையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்த சிறுவனின் தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்த மெக்ஸிக்கோ நாட்டு அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை மெக்ஸிக்கோவில் கடந்த நவம்பர் மாதம் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் ஆறு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது