ஈரானில் 176 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விபத்தில் சிக்கிய நிலையில், முதற்கட்ட விசாரணையில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
உலகிலே கச்சா எண்ணெய் வளத்தில் சிறந்து விளங்கும் நாடாக ஈரான் உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் சந்தையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அமெரிக்கா கடந்த அரை நூற்றாண்டுகளாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஈரானின் புரட்சிகர இராணுவ தளபதியான குவாசிம் சுலைமானியை அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்கி கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான், ஈராக்கில் இருக்கும் அமெரிக்க இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.<
இந்த தாக்குதல் நடத்தப்பட்ட 4 மணி நேரத்திற்கு முன் தெஹ்ரானிலிருந்து 176 பேருடன் புறப்பட்ட உக்ரைன் பயணிகள் விமானம் 6 நிமிடத்தில் விபத்தில் சிக்கி தூள் தூளானது.
இது தொழில்நுட்ப கோளாறால் ஏற்படவில்லை, ஈரான் தான் தவறுதலாக ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது என்று அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் தெரிவித்து வருகின்றன.
#Breaking #NewsMap
I finally found the exact location of the #PS752 crash site.
The Boeing traveled more than 20 kilometres after @flightradar24 lost its track over Parand and crashed in the town of Khalaj Abad.#Iran pic.twitter.com/7ILNhGzWv6— Julian Röpcke (@JulianRoepcke) January 8, 2020
ஆனால் ஈரான் அதற்கு ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் என்று கூறி வருகிறது. இந்நிலையில் இந்த விமான விபத்து குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன் கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதில், விமானம் புறப்பட்டு 20 கி.மீற்றர் பறந்துள்ளது தெரியவந்துள்ளது. அதே போல் விமான புறப்படத் தொடங்கியபோது புகை வெளியாகி, தொடர்ந்து விமானத்தில் தீப் பிடித்துள்ளது.
தீ பிடித்ததை அறிந்த விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி, உடனடியாக விமானத்தை தெஹ்ரான் விமான நிலையத்திற்குத் திருப்பியுள்ளார். அப்போதுதான் விமானம் வெடித்துச் சிதறியுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஈரான் தான் ஏவுகணை தாக்குதல் நடத்தி சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இந்த தகவலை அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் ஏற்றுக் கொள்ளுமா என்பது தெரியவில்லை.