Business

கொரோனா வைரஸ் குறித்து முதல் முறையாக எச்சரிக்கை விடுத்த மருத்துவர் மரணம்

கொரோனா வைரஸை முதன் முதலில் கண்டுபிடித்த மருத்துவர் மரணம் அடைந்துள்ள நிலையில் அவருக்கு வுஹான் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.

சீனாவில் மிகவும் கொடூரமான வைரஸாக மாறியுள்ள கொரோனாவால் இதுவரை 630க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

சீனா- வுஹான் நகரின் முதன்மை மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் மருத்துவர் Li Wenliang. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை டிசம்பர் மாத தொடக்கத்திலேயே கண்டுபிடித்துவிட்டார்.இது குறித்து அறிந்த அரசாங்கம் அவரை மிரட்டி வைத்ததோடு கைது செய்தது.மேலும் பொலிசாரால் கைது செய்யப்பட்ட மருத்துவர் லி, ஜனவரி 3 ஆம் திகதி விடுவிக்கப்பட்டார்.

 

 

இந்த நிலையில் ஜனவரி 10 ஆம் திகதி அவருக்கு இருமல் ஏற்பட்டது. அடுத்த நாள், இருமல் காய்ச்சலாக மாறியது. தொடர்ந்து ஜனவரி 12 க்குள், மருத்துவர் லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஆராய்ந்த வைரஸிற்கான சோதனைகள் எதிர்மறையாக வந்தன, ஆனால் அவர் சுவாசிக்கவும் நகரவும் கடும் சிரமத்திற்கு உள்ளானார்.

கொரோனா நோய் பாதிப்பு காரணமாக மருத்துவர் லி வென்லியாங்  சிகிச்சை பெற்றுவந்தார்  இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

34 வயதான லி-யின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார், அவருக்கு கணவரின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் உடல்நிலையும் சீராக இல்லை என தெரியவந்துள்ளது.

 

 

இதனிடையில் வுஹான் அரசு மருத்துவர் லி-யின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,கொரோனா வைரஸ் தாக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த மருத்துவர்களில் ஒருவரான மருத்துவர் லி வென்லியாங்குக்கு வுஹான் அரசாங்கம் ஆழ்ந்த இரங்கலையும் மரியாதையையும் தெரிவித்து கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் லீயிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். மட்டுமின்றி சீனாவில் லீ கதாநாயகனாக கொண்டாடப்பட்டு வருகிறார். சீன சமூக ஊடகமான வெய்போவில் இவரை பாராட்டி பலர் கருத்து தெரிவித்துள்ளனர். சீனாவின் சுகாதாரத் துறைக்கு லீ போன்ற லட்சக்கணக்கான மருத்துவர்கள் தேவை என குறிப்பிடும் அவர்கள் சீன சுகாதாரத் துறை குறித்த வருத்தங்களையும் பகிர்ந்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top