News

ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் 135பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

 

ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 135ஆக அதிகரித்துள்ளதாக ஜப்பான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

3,711 பேருடன் ஹொங்கொங்கிலிருந்து ஜப்பான் நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசுக் கப்பல், கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக, ஜப்பான் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

அந்தக் கப்பலில் இருந்து கடந்த மாதம் ஹொங்கொங்கில் இறங்கிய பயணிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் கப்பல், கரைக்கு அப்பால் நிறுத்தி தனிமைப்படுத்தப்பட்டது.

அந்தக் கப்பலில் உள்ள பயணிகளுக்கு தினந்தோறும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தற்போது வரை 135 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் 19ஆம் திகதி வரை அந்த கப்பல் இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கப்பல் இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அளிக்கப்பட்டு வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட நோயாளிகளில் அவுஸ்ரேலியா, அர்ஜென்டினா, ஐக்கிய இராச்சியம், கனடா, ஜப்பான், ஹொங்கொங், அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

To Top