Canada

  அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை

 

நாடு முழுவதும் கனேடியர்களும், சிறு வணிக நிறுவனங்களும் கோவிட்-19 இன் பாதிப்புக்களை எதிர்கொள்வதால், வேலைவாய்ப்புகளையும், வணிக நிறுவனங்களையும் பாதுகாப்பதற்குக் கனேடிய அரசு மாகாணங்களுடனும், பிராந்தியங்களுடனும் இணைந்து செயற்படுவதுடன், சிறுவணிக வாடகைதாரர்கள் நெருக்கடியான இந்தக் கால கட்டத்தைக் கடப்பதற்குத் தேவையான உதவியைச் சொத்துக்களின் உரிமையாளர்கள் வழங்குவதற்கும் ஆதரவளிக்கிறது.

பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ, சிறு வணிக நிறுவனங்களுக்கான கனடா அவசர வணிக வாடகை உதவித் (Canada Emergency Commercial Rent Assistance (CECRA)) திட்ட விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுவதாக இன்று அறிவித்தார்.

இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கும் காலத்தில் சொத்துக்களின் உரிமையாளர்கள் ஏப்ரல், மே (மாதங்களுக்கும் பின்னோக்கிச் செல்லுபடியாகும்) மற்றும் ஜூன் ஆகிய மாதங்களுக்கான அவர்களது சிறுவணிக வாடகைதாரர்களின் வாடகையை ஆகக் குறைந்தது 75 சதவீதத்தால் குறைப்பார்கள். CECRA வாடகையின் 50 சதவீதத்தையும், வாடகைதாரர்கள் 25 சதவீதத்தையும் செலுத்தும் அதேவேளை, சொத்துக்களின் உரிமையாளர்கள் வாடகையின் ஆகக் குறைந்தது 25 சதவீதத்தைத் தள்ளுபடி செய்வார்கள்.

சொத்துக்களின் உரிமையாளர்களின் வெற்றி வாடகைதாரர்கள் வெற்றிகரமாக இயங்குவதிலேயே தங்கியிருப்பதால், சொத்துக்களின் உரிமையாளர்கள் CECRA விற்கு விண்ணப்பிப்பது நிதி அடிப்படையில் அர்த்தமுள்ளதாக அமையும். வாடகைதாரர் ஒருவர் வங்குறோத்து நிலையைப் பிரகடனம் செய்து அதன் காரணமாக வெளியேற்றப்பட்டால் சொத்தின் உரிமையாளர் வாடகை வருமானம் எதனையும் பெறமாட்டாரென்பதுடன், புதிய வாடகைதாரர்களைத் தேடும் வேளையில் மேலதிக செலவினத்தையும் எதிர்கொள்வார். இந்தத் திட்டத்தில் சொத்துக்களின் உரிமையாளர்கள் தொடர்ந்து வருமானத்தைப் பெறுவதுடன், சிறு வணிக வாடகைதாரர்கள் மீண்டெழுந்து, உலகத் தொற்றுநோயின் பின்னர் செயற்படுவதற்குத் தேவையான ஆதரவையும் பெறுவார்கள்.

நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் சிறுவணிக நிறுவனங்களுக்கு மிகவும் முக்கியமான உதவியை வழங்கிக் கனேடியர்கள் தொடர்ந்து சம்பளங்களைப் பெறுவதை உறுதி செய்வதற்காகக் கனேடிய அரசு அறிவித்துள்ள மற்றொரு திட்டமாக CECRA விளங்குகிறது.

மேலதிக தகவல்களுக்கும், ஊடகங்களின் கேள்விகளுக்கும்:

டொறீன் சவுந்தரநாயகம்

[email protected]

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top