News

உயிருடன் இருக்காங்க! விழுந்து நொறுங்கிய விமான விபத்தில் உறவினர்கள்: மரணத்தை வென்ற பச்சிளம் குழந்தை

பாகிஸ்தானில் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் சென்ற பயணிகள் விமானம் விபத்தில் சிக்கிய நிலையில், விபத்தின் போது இடுபாடுகளுக்கிடையே சிக்கிய பச்சிளம் குழந்தையை உயிருடன் எடுத்து வரும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் அரசின் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம், லாகூர் நகரிலிருந்து 99 பயணிகள் மற்றும் 8 ஊழியர்கள் என மொத்தம்  99 பேருடன் இன்று கராச்சி நகருக்கு புறப்பட்டு சென்றது

 

 

விமான தரையிரங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியதால், விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகிவிட்டதாக கராச்சி நகர மேயர் உறுதிப்படுத்தினார்.

ஆனால் இந்த விமானத்தில் இருந்த பயணிகள் பலர் விபத்திற்கு பின் உறவினர்களை தொடர்பு கொண்டதாகவும், தங்கள் குடும்பத்தினர் உயிருடன் இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

 

குறுகிய பகுதியான காலனி குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதால், சுமார் 6 முதல் 7 குடும்பங்கள் விமானத்தில் இருந்தவர்களை தவிர சிக்கியுள்ளதாக கூறப்படுவதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அதே சமயம், அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்று இந்த விமான விபத்தின் நேரலையை செய்தியாக கொடுத்து வந்து கொண்டிருக்கும் போது, முதலில் ஒருவர் தடுப்பு காவலை தாண்டி ஓடி வந்து வழி விடும்படி கூறுகிறார்.

 

அதன் பின்னால் வரும் நபர் கையில் பச்சிளம் குழந்தையை தூக்கிய படி ஓடி வருகிறார். அந்த குழந்தை இடிபாடுகளுக்குள் சிக்கிய குழந்தையா? அல்லது விமானத்தில் இருந்து தப்பிய குழந்தையா என்பது உறுதிபடுத்தப்படவில்லை.

ஆனால் அங்கிருக்கும் ஊடகங்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய குழந்தை, அதிசயமாக உயிர் தப்பியுள்ளதாக குறிப்பிட்டு வருகின்றன.  இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் மரணத்தை வென்ற குழந்தை என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

 

Latest News

To Top