News

கருப்பினத்தவரை கழுத்தில் அழுத்தி கொன்ற பொலிசார்!கலவர பூமியாக மாறும் அமெரிக்கா: தயார் நிலையில் இராணுவம்

அமெரிக்காவில் கருப்பின இளைஞரின் கழுத்தை நெரித்து கொன்ற, பொலிஸ் அதிகாரி மீது, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்த இராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில், கடந்த 25-ஆம் திகதி, ஜார்ஜ் பிளாய்டு  என்ற கறுப்பின இளைஞரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த பொலிஸ் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார். இதில், ஜார்ஜ் பிளாய்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

 

இதையடுத்து, பொலிசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்னபொலிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.  இந்நிலையில், ஜார்ஜ் பிளாய்டை கொன்ற பொலிஸ் அதிகாரி டெரெக் சவுவின், 44, கைது செய்யப்பட்டு, அவர்மீது, கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பெரும் வன்முறை வெடிக்கக் காரணமான பொலிசாரின் தனிப்பட்ட வாழ்விலும் பிரச்சினை வெடித்துள்ளது.  ஆம், அவரது மனைவியான Kellie Chauvin தனது கணவரை விவாகரத்து செய்வதாக அவரது சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்.

Kellie, Georgeஇன் மரணம் தனக்கு கடுமையான அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளதோடு, அவரது குடும்பத்தினர் மற்றும் அன்பிற்குரியவர்களுக்கு தனது ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

 

 

இதற்கிடையே, மின்னபொலிசில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, நேற்று முன்தினம் இரவு, 8:௦௦ மணி முதல், நேற்று காலை, 6:௦௦ மணி வரை, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இருப்பினும் ஊரடங்கை பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான மக்கள், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். உணவகம், வங்கி ஆகியவை தீ வைத்து கொளுத்தப்பட்டன. பல மணி நேரமாக எரிந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி கட்டுப்படுத்தினர்.

 

 

இதற்கிடையே, மின்னபொலிசில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, அமெரிக்க இராணுவத்தின் பொலிஸ் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.  ஆனாலும் லாஸ் வேகாஸ், லாஸ் ஏஞ்சலஸ் உள்ளிட்ட பல நகரங்களில், போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

புரூக்ளினில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது, பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஹூஸ்டனில் நடந்த பேரணியில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top