News

கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமில் அடுத்தடுத்து இருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு – கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த முதியவர் ஒருவர் இன்று காலை சுகவீனம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

முதியவர் உயிரிழந்தமைக்கான காரணங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற் கொள்ளப்படவுள்ளது.

இந்த நிலையில் கேப்பாபுலவு விமானப்படை தள தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து மற்றுமொரு நபர் வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட நிலையில் உயிரிழந்திருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top