News

கொரோனா – ஐரோப்பாவில், மீண்டும் மரண உச்சத்தை தொட்டது பிரிட்டன்.

 

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 739 பேர் மரணித்துள்ளதாக NHS தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், பிரிட்டனின் மொத்த மரணங்கள் 27,510 ஆக உயர்ந்துள்ளன.

குறிப்பாக ஐரோப்பாவில் கடந்த 24 மணித்தியால இறப்புகளில் பிரிட்டன் மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. ஸ்பெயின் +281 இறப்புகளையும், இத்தாலி +269 இறப்புகளையும், பிரான்ஸ் +218 இறப்புகளையும் பதிவு செய்துள்ள நிலையில் உலக அளவில் அமெரிக்காவின் 1173 என்ற உச்ச இறப்புக்கு அடுத்த நிலையில் பிரிட்டனின் இறப்புகள் பதிவாகி உள்ளன.

இதேவேளை புதிதாக தொற்றாளர்களாக இனம் காணப்பட்ட +6,201 பேருடன், தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 177,454 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை 5pm 29 April 2020 – 5pm 30 April 2020 காலப் பகுதியில் இங்கிலாந்தின் வைத்தியசாலைகளில் மரணமான 352 பேரில், 20 – 39 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 3 பேரும், 40 -50 வயதக்கு இடைப்பட்டவர்கள் 25 பேரும், 60 -79 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 126 பேரும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 198 பேரும் அடங்குவர் என NHS குறிப்பிட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top