News

பிரான்சில் இருந்து பிரித்தானியாவிற்கு கடத்தப்பட்ட 39 அகதிகள் உயிரிழந்த சம்பவம்! 13 பேர் கைது

பிரான்சில் இருந்து பிரித்தானியாவிற்கு அகதிகளை கடத்திச் சென்ற போது, 39 பேர் உயிரிழந்த சம்பவத்தில், இல் து பிரான்சுக்குள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வியட்னாமைச் சேர்ந்த அகதிகள் 39 பேரை பிரான்சில் இருந்து பிரித்தானியாவிற்கு கடத்திச் சென்ற போது அவர்கள் குளிர்சாதனப்பெட்டிக்குள் உயிரிழந்தனர்.<

இதில், 31 ஆண்கள் 8 பெண்கள் என அகதிகள் அனைவரும் குளிரில் உறைந்து பலியாகினர். இதனால் இது தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பரிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகம் நேற்று இல்-து-பிரான்சுக்குள் 13 பேரை, இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதே சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி, பெல்ஜியத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டிருந்தது நினைவு கூரத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top