News

முக்கிய ஆவணங்களுடன் வெளியேறினேனா? உண்மையை உடைத்த வுஹான் ஆய்வாளர்

கொரோனா தொடர்பில் முதன் முறையாக எச்சரிக்கை விடுத்த சீனாவின் வெளவால் பெண்மணி என்ற ஆய்வாளர் தாம் நாட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்பட்ட தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டுவரும் உலகின் முதன்மை ஆய்வாளர்களில் ஒருவர் வுஹான் நகரை சேர்ந்த ஆய்வாளர் Shi Zhengli. கொரோனாவின் மரபணு தொடர்பில் முதன் முறையாக கண்டறிந்த இவர் தற்போது அரசின் கட்டாயத்தால் அமைதி காத்து வருகிறார்.

இந்த நிலையில் அவரும் அவரது குடும்பத்தினரும் சீனாவிலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறி கடந்த 2 நாட்களாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகிறது. மட்டுமின்றி கொரோனா தொடர்பில் அதி முக்கிய ஆவணங்களை அவர் பாரிஸ் நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதகத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

ஆனால் அந்த தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்தியே எனவும், தாம் தவறேதும் செய்யவில்லை எனவும், தமது நண்பர்களிடமும் குடும்பத்தாரிடமும் உறுதி அளித்துள்ளார்.  சனிக்கிழமை சமூக வலைதள பக்கம் ஒன்றில் குறிப்பிட்ட அவர், நாட்டைவிட்டு வெளியேறும் தேவை எதுவும் ஏற்படவில்லை.

அறிவியலை மட்டுமே நம்பும் தமக்கு இந்த மேக மூட்டம் மிக விரைவில் விலகும் எனவும் சூரியன் மீண்டும் பளிச்சிடும் எனவும் தெரியும் என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top