Canada

ரொரன்றோ அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து விழுந்து உயிரிழந்த இளம்பெண்: பொலிசார் தள்ளிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் பரபரப்பு!

 

 

குடும்பத் தகராறு ஒன்றை விசாரிக்க ரொரன்றோவிலுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றிற்கு பொலிசார் சென்றிருந்த நிலையில், அதே வீட்டிலிருந்த இளம்பெண் ஒருவர் பால்கனியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

கீழே சென்று பார்க்கும்போது அவர் உயிரிழந்திருந்தார். அவரது பெயர் Regis Korchinski-Paquet. அவர் ஒரு கருப்பினப்பெண். ஏற்கனவே அமெரிக்காவில் பொலிசார் ஒரு கருப்பினத்தவரைக் கொன்றுவிட்டதாக நாடெங்கும் வன்முறை வெடித்துள்ள நிலையில், Regisம் ஒரு கருப்பினப்பெண் என்பதால், கனடாவிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

அவரை, பொலிசார்தான் கீழே தள்ளி கொன்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது. அந்த பெண் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ரொரன்றோ பொலிசார், இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என மறுப்புத் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள கருத்துக்கள் சந்தர்ப்பவாதக் கருத்துக்கள், அவற்றால் மக்களிடையேயும் பொலிசாரிடமும் பயத்தையும் அவநம்பிக்கையையும்தான் ஏற்படுத்த முடியும் என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

 

 

ஆனால், இது இனரீதியான தாக்குதல் என்கிறார்கள் Regisஐ அறிந்தவர்கள். 29 வயதான ரெஜிஸ் கோர்ச்சின்ஸ்கி-பாக்கெட் ஒரு மனநல நெருக்கடிக்கு மத்தியில் இருந்ததாகவும், அவரின் உதவியைப் பெறுவதற்காக அவர்கள் ப்ளூர் ஸ்ட்ரீட் மற்றும் ஹை பார்க் அவென்யூவுக்கு அருகிலுள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்கு போலீஸை அழைத்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை, பொலிசார் வந்தபின் கோர்ச்சின்ஸ்கி-பாக்கெட்டின் தாய் மற்றும் சகோதரர் தனது குடியிருப்பில் நுழைவதை பொலிசார் தடைசெய்ததாக சிங் கூறினார், மேலும் 29 வயதான அவர் தனது பால்கனியில் இருந்து குதித்திருக்க வாய்ப்பில்லை என்று பரிந்துரைத்தார்

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top