News

24 மணித்தியாலத்தில்  621 இறப்புகளைப் பதிவு செய்த பிரிட்டன் 28 ஆயிரம் மரணங்களைக் கடந்தது.

 பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் +621 பேர் மரணித்துள்ளதாக NHS தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், பிரிட்டனின் மொத்த மரணங்கள் 28,131  ஆக உயர்ந்துள்ளன.

குறிப்பாக ஐரோப்பாவில் கடந்த 24 மணித்தியால இறப்புகளில் 3ஆவது நாளாகவும்  பிரிட்டன் உச்சத்தை தொட்டுள்ளது. ஸ்பெயின் +276  இறப்புகளையும், இத்தாலி +474 இறப்புகளையும், பிரான்ஸ் +166 இறப்புகளையும்,  பதிவு செய்துள்ள நிலையில் உலக அளவில் அமெரிக்காவின் +887  என்ற உச்ச இறப்புக்கு அடுத்த நிலையில் பிரிட்டனின் இறப்புகள் பதிவாகி உள்ளன. அத்துடன் இத்தாலியின் இறப்புகளோடு மிக நெருக்கமான எண்ணிக்கையை பிரிட்டன் எட்டியுள்ளது.

இந்த நிலையில்,புதிதாக தொற்றாளர்களாக இனம் காணப்பட்ட +4,806 பேருடன், தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 182,260  ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை 5pm 30 April 2020 – 5pm 01 May  2020 காலப் பகுதியில் இங்கிலாந்தின் வைத்தியசாலைகளில் மரணமான 370 பேரில், 20 – 39 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஒருவரும், 40 -59 வயதக்கு இடைப்பட்டவர்கள் 25 பேரும், 60 -79 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 148 பேரும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 196 பேரும் அடங்குவர் என NHS குறிப்பிட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top