India

அன்னாசியில் பட்டாசை வைத்து யானையை சாகடித்த சம்பவம் ‘வலுக்கும் எதிர்ப்பு’

இந்தியாவின் – கேரளா அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவை சேர்ந்த 15 வயதான கருவுற்ற யானை, உணவு தேடி மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு சென்றது. அந்த கிராம மக்கள் யானைக்கு பிடித்தமான உணவு வகைகளை வழங்கினர்.

ஆனால் சில விஷமிகள், அன்னாசி பழத்தில் பட்டாசை மறைத்து வைத்து யானைக்கு கொடுத்துள்ளனர். அதை யானை சாப்பிட்டபோது பட்டாசு வெடித்து சிதறியது. இதில் யானையின் நாக்கு, வாய்ப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியில் அலறி துடித்த கருவுற்ற யானை அங்கும் இங்கும் ஓடி, அங்குள்ள ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்தது.

தகவல் அறிந்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 2 கும்கி யானைகளின் உதவியுடன் கருவுற்ற யானையை மீட்டனர். கால்நடை வைத்தியர்கள் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். கடந்த 27ஆம் திகதி  மாலை 4 மணிக்கு யானை உயிரிழந்தது. இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவலை மலப்புரம் வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணன் சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், யானையின் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

சினிமா நட்சத்திரங்கள், செயற்பாட்டாளர்கள். விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட இலட்சக்கணக்கானவர்கள் சமூக வலைத்தளங்களில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top