News

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்… உணவகம் தீக்கிரை: கொந்தளித்த மக்கள்

அமெரிக்காவில் பொலிசாரால் கருப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட காரணமான உணவகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஜோர்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா நகரில் வெள்ளிக்கிழமை இரவு 27 வயதான கருப்பின இளைஞர் ரேஷார்ட் ப்ரூக்ஸ் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

வெண்டியின் உணவகம் ஒன்றில் நடந்த இச்சம்பவம் அட்லாண்டா முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மட்டுமின்றி பொலிசார் இளைஞர் ரேஷார்ட் ப்ரூக்ஸ்-ஐ துரத்திச் சென்று துப்பாக்கியால் சுடும் காணொளி காட்சிகள் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்களில் சிலர் இளைஞர் ரேஷார்ட் ப்ரூக்ஸ் கொல்லப்பட காரணமாக அமைந்த வெண்டியின் உணவகத்தை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

 

மட்டுமின்றி, முந்தைய நாள் கொலை தொடர்பாக அட்லாண்டா காவல்துறைத் தலைவர் எரிகா ஷீல்ட்ஸ் ராஜினாமா செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டம் வெடித்தது.

மேலும், சனிக்கிழமை பிற்பகுதியில், ப்ரூக்ஸை சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் அதிகாரி காரெட் ரோல்ஃப் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

 

 

இதனிடையே, தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்று சேர்வதற்கு சுமார் 45 நிமிடங்கள் முன்னரே அந்த வெண்டியின் உணவகம் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

எஞ்சிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அருகிலுள்ள நெடுஞ்சாலையில் அணிவகுத்து, போக்குவரத்தைத் தடுத்தனர், வாகனங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு முன்பு காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top