Canada

ஒன்ராறியோ கொவிட்-19 பற்றிய தகவல் 

 
இக்கட்டான இக்காலகட்டத்தில் ஒன்ராறியோ வாழ் மக்களின் உடல் நலத்தையும் அவர்களின் நல்வாழ்வையும் பாதுகாப்பதைத் தவிர வேறெதுவும் முக்கியமானதன்று. கொவிட்-19 நோய்தொற்றுக் கண்டறியப்பட்ட காலம் முதல் ஒன்ராறியோ மானிலமானது நிலைமையைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதுடன் இத்தீவிர நோய்த்தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த தீர்க்கமாகவும் செயற்பட்டு வருகிறது.

ஒன்ராறியோ தலைமை சுகாதார அதிகாரியின் அறிவுறுத்தலுக்கிணங்கவும், ஒன்ராறியோ சட்டமன்றத்தின் ஒப்புதலின் அடிப்படையிலும் எமது அரசாங்கம் அவசரகால மேலாண்மை மற்றும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜூன் மாதம் 30ஆம் திகதிவரை அவசரகால நிலையை நீட்டித்துள்ளது.

மானிலத்தில் அவசரகால நிலையை நீட்டிப்பது, எமது மானிலத்தை படிப்படியாக பாதுகாப்புடன் மீளியங்கு நிலைக்குக் கொண்டுவர உதவுவதுடன், கொவிட்-19 நோய்த்தொற்றுப் பரம்பலுக்கு எதிராக எமது வளங்கள் அனைத்தையும் நாம் பயன்படுத்தவும் உதவும்.

அவசரகால மேலாண்மை மற்றும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலையினை நீட்டிப்பது, எமது சமுகத்தையும் வணிகங்களையும் பாதுகாக்கவும், எமது முன்னணிப் பணியாளர்களுக்கு உதவவும், எமது சுகாதாரக் கட்டமைப்புகள் மீதான சுமையைக் குறைக்கவும் உதவும்.
 
விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற  உறுப்பினர்
ஸ்காபரோ – றூஜ் பார்க்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top