News

கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து பாய்ந்த கார்: கர்ப்பிணி உட்பட நால்வர் பலி!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலுள்ள 200 அடி உயர பாலம் ஒன்றிலிருந்து கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பாய்ந்து, நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் திடீரென கட்டுப்பாட்டை இழக்கும் ஒரு கார், பாலத்திலிருந்து விழவிருப்பதை மட்டும் காணமுடிகிறது. அந்த கார் வேகமாக 200 அடி உயர பாலத்திலிருந்து விழும்போது, கீழே ரயில் பாதையில் சரக்கு ரயில் ஒன்று நின்றுகொண்டிருந்திருக்கிறது.

 

 

கார் அந்த ரயில் மீது மோதிய வேகத்தில் அப்பளம்போல் நொறுங்கியுள்ளது. இதில், காரை ஓட்டி வந்தவர் கர்ப்பிணிப்பெண்ணான Perla Navarro (19). அவரும் காரில் பயணித்த Kyle Erickson (19), Christopher Mata(21), மற்றும் Cecilia Ayala (22) ஆகிய அனைவருமே சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

எதனால் கார் கட்டுப்பாட்டை இழந்தது என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top