Canada

கனடாவில் பெண் ஒருவரை வன்கொடுமை செய்த இருவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிபதி

கனடாவில் மதுபான விடுதி நடத்தும் இருவர் பெண்ணை வன்கொடுமை செய்த வழக்கில் அவர்களுக்கு தலா 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இருவர் குறித்தும் நீதிபதி காட்டமாக பேசியுள்ளார்.

ரொரன்ரோவை சேர்ந்த Gavin MacMillan மற்றும் Enzo DeJesus Carrasco ஆகிய இருவரும் மதுபான விடுதி நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2016-ல் பெண் ஒருவரை பலவந்தப்படுத்தி வன்கொடுமை செய்துள்ளனர்.

< இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இருவருக்கும் தலா 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அப்போது நீதிபதி கூறுகையில், இருவரின் குணாதிசயம் குறித்து நான் கூற வேண்டும். Gavin மற்றும் Enzo ஆகிய இருவரும் பாதிக்கப்பட்ட பெண்ணை தூக்கி எறியும் பொருளாகவே பார்த்தனர். பல நேரங்களில் பொது இடங்களில் மிகவும் கண்ணியமாக இருவரும் நடந்து கொண்ட போதிலும், சம்பவத்தின் போது அவர்கள் அப்படி நடக்கவில்லை.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக போதை மருந்துகளையும் கொடுத்து சீரழித்துள்ளனர் என கூறியுள்ளார். இதனிடையில் தண்டனை பெறப்பட்ட குற்றவாளிகள் இருவரும் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top