News

கருப்பினத்தவர் கொலை: 2வது பொலிஸ் அதிகாரி பிணையில் விடுதலை

கருப்பினத்தவரான ஜார்ஜி பிளாய்டின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரியான J. Alexander Kueng பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் பொலிஸ் காவலில் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

ஜார்ஜின் மரணத்துக்கு நீதி கோரியும், இனவெறிக்கு எதிராகவும் உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பொலிஸ் அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

முக்கிய குற்றவாளியான Derek Chauvin மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது.

மற்ற மூவரில் J. Alexander Kueng என்பவரும் ஒருவர், இவர் நேற்று உள்ளூர் நேரப்படி மாலை 7.30 மணியளவில் 750,000 டொலருக்கு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக Star Tribune செய்தி வெளியிட்டுள்ளது.

மற்றொரு பொலிஸ் அதிகாரியான Thomas Lane என்பவர் கடந்த திங்களன்று விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top