News

கொழுந்துவிட்டெரிந்த நெருப்பு… பரிதாபமாக பலியான 3 சிறுவர்கள்: ஆபத்தான நிலையில் பிரித்தானிய தாயார்

பிரித்தானியாவில் குடியிருப்பு ஒன்று தீ விபத்தில் சிக்கியதில் மூன்று சிறார்கள் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரென்ஃப்ரூஷையரின் பைஸ்லியில் நேற்றிரவு நடந்த இந்த தீ விபத்தில் 13 வயதுக்கு உட்பட்ட 3 சிறார்கள் பரிதாபமாக இறந்துள்ளனர். இவர்களின் தாயார் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார்.

 

 

இந்த கொடூர விபத்தில் பியோனா கிப்சன்(12), அலெக்சாண்டர் ஜேம்ஸ் கிப்சன்(8), மற்றும் பிலிப் கிப்சன்(5) என அனைவரும் இறந்ததை ஸ்காட்லாந்து பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவர்களின் 39 வயது தாயார் ராயல் அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  தீ விபத்தை அடுத்து பரிதாபமான நிலையில் மீட்கப்பட்ட குழந்தைகள் குயின் எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர்கள் இறந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் தெளிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை, ஆனால் நேற்று இரவு 9 மணியளவில் தொடங்கியதாக கருதப்படுகிறது.  விரிவான விசாரணைக்கு பின்னரே, சம்பவத்தின் முழு பின்னணி தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top