News

சீனாவை உலக அளவில் தனிமைப்படுத்த ஒன்று கூடிய 8 நாடுகள்!

சீனாவை தனிமைப்படுத்துவதற்காகவும், அதற்கு எதிராகவும் 8 நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்று சேர திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்தே சீனாவின் மீது உலக நாடுகள் கடும் கோபத்தில் உள்ளன.

வைரஸ் குறித்த தகவலை சொல்லாமல் இருந்தது. பொருளாதார சரிவுக்கு காரணமாக இருந்தது. பொருளாதார சரிவை காரணம் காட்டி வெளிநாட்டில் இருந்த நிறுவனங்களை வாங்கியது போன்ற பல்வேறு காரணங்களால் சீனா மீது பல நாடுகளில் கோபத்தில் உள்ளன.

குறிப்பாக இதில், சீனா மீது அமெரிக்கா கடுமையான கோபத்தில் உள்ளது. சீனாவை முடக்க என்ன எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்ய அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், சீனாவிற்கு எதிராக 8 நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்று சேர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதார ரீதியாக சீனா உலக நாடுகளுக்கு கொடுக்கும் அழுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர இந்த 8 நாடுகள் முடிவு செய்துள்ளது. அதன்படி அமெரிக்கா, ஜேர்மனி, பிரித்தானியா, ஜப்பான், அவுஸ்திரேலியா, கனடா, ஸ்வீடன், நார்வே ஆகிய நாடுகள் இதில் ஒன்று சேர்ந்து உள்ளது.

சீனாவிற்கு எதிராக இந்த 8 நாடுகளின் அரசியல்வாதிகள் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்து இருக்கிறார்கள். அதன்படி முதலாவதாக உலக நாடுகளின் சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்குவது. சீனாவின் நிறுவனங்கள் பிற நாட்டு நிறுவனங்களை வாங்குவது, அதன் பின், சீனாவின் இராணுவம் அண்டை நாடுகளின் எல்லையில் அத்துமீறுவது, தென் சீன கடல் எல்லையில் அத்துமீறுவது ஆகிய பணிகளை தடுக்க வேண்டும் என்று இதில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சீனா தென் சீன கடல் எல்லை, தைவான் ஆகிய நாடுகள் மீது அத்துமீறி வருகிறது. இதை மொத்தமாக தடுக்க வேண்டும். சீனாவின் ஆதிக்கத்தை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஹாங்காங் பிரச்சனையில் சீனாவின் செயலை தடுக்க வேண்டும். ஹாங்காங்கை சீனா மொத்தமாக கட்டுப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.

சீனா இதை உள்நாட்டு விவகாரம் என்று கூறி வருகிறது. ஆனால் சீனா ஹாங்காங்கிற்கு கொடுத்த வாக்கை மீறி விட்டது. இதனால் ஹாங்காங்கில் அமைதியை கொண்டு வரும் வகையில் பணிகளை செய்ய வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சீனா மற்ற நாடுகளுடன் நட்பாக இருப்பதை தடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சீனா தற்போது ரஷ்யா, தென் கொரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நட்பாக இருக்கிறது. சீனாவின் இந்த உறவுகளை கொஞ்சம் கொஞ்சமாக துண்டிக்க வேண்டும். உலக அளவில் சீனாவை தனித்து விட வேண்டும் என்று இந்த 8 நாட்டு அரசியல்வாதிகள் முடிவு செய்துள்ளதாகவும், இந்த குழுவில் ஜப்பான், பிரித்தானியா ஆகிய நாடுகள் இருப்பது சீனாவிற்கு அதிர்ச்சியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top