News

ஜார்ஜுக்காக ஒன்றிணைந்த பல்லாயிரக்கணக்கான பிரித்தானியர்கள் மண்டியிட்டு ஆதரவைத் தெரிவித்தனர். 

அமெரிக்காவில் சில வெள்ளையினத்தவர்கள் சேர்ந்து ஒரு கருப்பினத்தவரைக் கொன்றுவிட்டதென்னவோ உண்மைதான்! ஆனால், இன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள், இன பாகுபாடின்றி உயிரிழந்த ஜார்ஜ் பிளாய்டுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், மொத்த பிரித்தானியாவும் ஜார்ஜுக்கும், ஏன் மொத்த கருப்பின சகோதர சகோதரிகளுக்கும் தங்கள் ஆதரவை தெரிவிப்பதற்காக முழங்காலிட்டுள்ளது.

 

 

குடும்பங்கள், குழந்தைகள், பொலிசார், தீயணைப்பு வீரர்கள் என நாடு முழுவதும், ’கருப்பினத்தோர் உயிர்களும் விலைமதிப்புள்ளவையே’ என்ற பதாகைகளை ஏந்தியவண்ணம் பிரித்தானியா முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் முழங்கால் படியிட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகி காண்போர் நெஞ்சத்தை நெகிழச் செய்து கண்களை குளமாக்கியுள்ளன.

 

அமெரிக்காவின் மின்னசோட்டாவில், ஜார்ஜ் ப்ளாய்ட் என்ற கருப்பினத்தவரின் கழுத்தின்மீது Derek Chauvin என்ற வெள்ளையின பொலிசார் முழங்காலை ஊன்றி சுமார் 9 நிமிடங்கள் நின்றதைத் தொடர்ந்து ஜார்ஜ் பலியானார். இதைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. உலகம் முழுவதும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தோன்றியது.

 

இந்நிலையில், பேரணி ஒன்றின்போது பொலிசார் பலர் சட்டென கருப்பினத்தவர் முன் மண்டியிட, போராட்டக்காரர்கள் கூட்டம் திகைத்தது அதன்பின்னர் பொலிசார் பலர், தாங்கள் இனவெறியர்கள் அல்ல என்று கூறி ஆங்காங்கே கருப்பினத்தவர் முன் மண்டியிட்டனர். இந்நிலையில், நேற்று மாலை 6 மணி ஒலித்ததும், பிரித்தானியா முழுவதும் உள்ள குடும்பங்கள், தங்கள் வீடுகள் முன் திரண்டு மண்டியிட்டு, தங்கள் கருப்பின சகோதர சகோதரிகளுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துக்கொண்டனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top