News

தொடர்கதையாகும் கருப்பினத்தவர் மீதான பொலிசாரின் தாக்குதல்கள்: மற்றொரு வீடியோ!

தாக்கப்படும் நபர் உண்மையிலேயே அப்பாவியா, குற்றவாளியா என்பதையெல்லாம் ஆராய்வதை விட தற்போது கருப்பினத்தவர் தாக்கப்படும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில், சமீபத்தில் Tennesseeயில் கருப்பினத்தனர் ஒருவரை பொலிசார் சிலர் தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. Reginald Arrington Jr.(32) என்பவர் பெண்களிடம் வழி கேட்பதுபோல் தங்கள் ஏரியாவில் சுற்றுவதாகவும், அவரது பாக்கெட்டில் துப்பாக்கி இருப்பதுபோல் தெரிவதாகவும் Tennesseeயில் ஒரு பெண் பொலிசாரிடம் புகார் அளித்திருந்தார்.

 

 

பொலிசார் Reginaldஐ அணுகவும், போலியான ஒரு பெயரைக் கூறிய Reginald, தன் பாக்கெட்டில் ஒன்றும் இல்லை என்று காட்டியபடி, நான் சுடப்பட விரும்பவில்லை என்று கத்திக்கொண்டே தரையில் விழுந்து கிடந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட Reginald, பொலிசார் ஒருவரின் துப்பாக்கியை எடுக்க முயன்றதாகவும் பொலிசார் குற்றம் சாட்டியிருந்தனர்.  இதற்கிடையில், டேஷ் கேம் வீடியோ ஒன்று வெளியிடப்பட, அது ஒரு கடும் குழப்பமான சூழலைக் காட்டுவது உண்மை என்றாலும், ஆனால் பொலிசார் கூறியதுபோல் Reginald யாருடைய துப்பாக்கியையும் எடுப்பதுபோல் அதில் தெரியவில்லை.

 

 

ஒரு கட்டத்தில் Reginald என்னால் மூச்சு விட முடியவில்லை என கத்துகிறார். நீங்கள் என்னைக் கொல்லப்போகிறீர்கள் என அவர் கத்த, பொலிசார் அவருக்கு கைவிலங்கிட்டதும், பொலிஸ் வாகனத்தில் ஏற்றுகிறார்கள்.

 

 

Reginald மீது பாதசாரிகள் பாதை சட்டத்தை மீறியது, கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தது என பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால், அந்த வீடியோவைப் பார்த்த பின்னர், அத்தனை குற்றச்சாட்டுகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளதோடு, சம்பவத்தில் ஈடுபட்ட பொலிசார் மீதே விசாரணை திரும்பியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top