News

நீ ஒரு கொலைகாரன்… நீ சிறையில்தான் இருக்கவேண்டும்: கருப்பினத்தவர் கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பொலிசாரை மடக்கிய பெண்!

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பொலிசார் ஒருவர் மளிகை கடைக்கு பொருட்கள் வாங்கவந்த நிலையில், அவரை மடக்கி சரமாரியாக பெண் ஒருவர் கேள்வி கேட்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான J. Alexander Keung (26) 750,000 டொலர்கள் பிணைத்தொகை செலுத்தி ஜாமீனில் வெளிவந்துள்ளார். ஜாமீனில் வந்த மறுநாளே அவர் மின்னசோட்டாவிலுள்ள மளிகைக் கடைக்கு பொருட்கள் வாங்க வந்துள்ளார்.

மளிகைக் கடையில் அவரை அடையாளம் கண்டு கொண்ட பெண் ஒருவர் தனது செல்போனில் அவரை வீடியோ எடுத்தபடி சரமாரியாக கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்துள்ளார்.

நீங்கள் Keungதானே என்று அவர் கேட்க, ஆம் அது நான்தான் என்கிறார் அவர்.  நீங்கள் நேற்றுதான் சிறையிலிருந்து வெளியே வந்தீர்கள், அதற்குள் சொகுசாக எந்த குற்றமுமே செய்யாதவாறு கடைக்கு வந்துவிட்டீர்கள், அப்படித்தானே என்று அவர் Keungஐ மடக்க, சொகுசாக என்றெல்லாம் கூறமுடியாது, அத்தியாவசிய பொருட்களை வாங்க வந்தேன் என்கிறார் Keung.

 

 

உடனே, உங்களுக்கு அந்த உரிமை இல்லை என்று நான் நினைக்கிறேன் என்று கூறும் அந்த பெண், உங்களை ஜாமீனில் விட்டிருக்கக்கூடாது என்று நினைக்கிறேன் என்கிறார். அது எனக்கு புரிகிறது என்று கூறும் Keung, நீங்கள் அப்படி நினைத்தால், அதற்காக நான் வருந்துகிறேன் என்று கூற, அந்த வார்த்தைகள் அந்த பெண்ணை மேலும் கோபப்படுத்துகின்றன.

இல்லை, நீங்கள் வருந்தவில்லை என்று கோபத்துடன் கூறும் அந்த பெண், அந்த மனிதரைக் கொல்லாததுபோல நீங்கள் இங்கே நிற்கிறீர்கள், மக்கள் உங்களை அடையாளம் காணமாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா என்கிறார். இங்கே நிற்பதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை, நீங்கள் கொஞ்சம் கூட உணர்ச்சிகளையே வெளிக்காட்டாமல் ஒருவரைக் கொன்றீர்கள், நீங்கள் இங்கே நிற்க உங்களுக்கு உரிமை இல்லை என்கிறார் அந்த பெண் தொடர்ந்து.

 

 

எனக்கு புரிகிறது என்று கூறியவண்ணம் தனது பொருட்களுக்கான பணத்தை செலுத்துவதற்காக Keung செல்ல முயல, மீண்டும் இடைமறிக்கிறார் அந்த பெண்.  நீங்கள் பொருட்கள் வாங்குவது எங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறும் அந்த பெண், நீங்கள் சிறையிலடைக்கப்படவேண்டுமென்றே நாங்கள் விரும்புகிறோம் என்கிறார்.  நான் வாங்கிய பொருட்களுடன் நான் வெளியே போகிறேன் என்று Keung கூற, உடனே கடையிலுள்ள எல்லாரும் கேட்கும் வண்ணம், ஜார்ஜ் கொலையில் தொடர்புடைய பொலிசாரில் இவர் ஒருவர் என கத்துகிறார் அந்த பெண்.

இப்படி நீங்கள் சொகுசாக மின்னசோட்டாவில் சுற்றப்போவதில்லை என்று கூறும் அந்த பெண், நீங்கள் மன்னிப்புக் கேட்கவும் விரும்பவில்லை என்பது எனக்குத் தெரியும் என்கிறார். அடுத்தபடியாக, உங்களால் எப்படி 750,000 டொலர்கள் பிணைத்தொகை செலுத்த முடிந்தது என்று அந்த பெண் விடாமல் அவரை மடக்க, பேசாமல் பணம் செலுத்தச் செல்கிறார் Keung.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில், அது 700,000 முறைகளுக்கு மேல் பார்வையிடப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top