News

பிரித்தானியாவில் கொலைவெறித் தாக்குதலில் பலியான மூவரின் வி[பரம்

பிரித்தானியாவில் சனிக்கிழமை லிபியா அகதியால் கொலைவெறித் தாக்குதலுக்கு பலியான மூவரின் பின்னணி   புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது.

ரீடிங் பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் சனிக்கிழமை இரவு லிபியா அகதி இளைஞரால் கொலைவெறித் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டதுடன் சிலர் காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

கொல்லப்பட்ட மூவரின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட பின்னணி தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஜேம்ஸ் ஃபர்லாங் ஆசிரியர் எனவும் டேவிட் வெயில்ஸ் மிகத் திறமையான மூத்த விஞ்ஞானி எனவும் மூன்றாவது நபர் ஜோ ரிச்சி-பென்னட் எனவும் தெரியவந்துள்ளது.

சனிக்கிழமை சம்பவம் நடந்த அன்றே கொல்லப்பட்ட மூவரில் ஒருவர் ஜேம்ஸ் ஃபர்லாங் என அவரது நண்பர்களால் அடையாளம் காணப்பட்டது. மிக அருமையான நண்பரை சீக்கிரமே இழந்து விட்டதாக ஜேம்ஸ் ஃபர்லாங் தொடர்பில் பலரும் தெரிவித்துள்ளனர்.

 

 

புத்திசாலித்தனமான மற்றும் அன்பான மகனை இழந்து தவிக்கிறோம், மொத்த குடும்பமும் மனம் உடைந்து போயுள்ளது என்றார் ஜோ ரிச்சி-பென்னட்டின் தந்தை.   பிலடெல்பியாவில் இருந்து 15 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்த ஜோ, லண்டனில் சட்ட வல்லுனர்களுக்கான நிறுவனத்தில் பணி புரிந்துள்ளார். பின்னர் ரீடிங் நகரில் அமைந்துள்ள டச்சு மருந்து நிறுவனத்தில் இணைந்து பணியாற்றி வந்துள்ளார்.

 

 

ஆசிரியரான ஜேம்ஸ் ஃபர்லாங் தொடர்பிலும் அவரது இழப்பை தங்களால் நம்ப முடியவில்லை என்றே தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை இரவு குறித்த பூங்காவுக்குள் திட்டமிட்டே புகுந்த லிபியா அகதி கைரி சதல்லா, கூட்டத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்கியதை நேரில் பார்த்தவர்களும் உயிர் தப்பியவர்களும் விலாவாரியாக விளக்கியுள்ளனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top