Canada

 பீல் பிராந்திய கல்விச்சபைஅறிவித்தலில் ! பேரதிர்ச்சியில் தமிழ் சமுகம் Mpp -விஜய் தணிகாசலம்,

பேரதிர்ச்சியிலிருந்து ஒரு சமுகம் மீண்டெழுந்து வருவதற்கு, நடைபெற்ற நிகழ்வுகளை ஒப்புக்கொள்ளலும்  அதற்கான அங்கீகாரமும் முக்கியமான படிநிலைகளாகும். பீல் பிராந்திய கல்விச்சபை உட்பட பல்வேறு கல்விச்சபைகள் மே 18 ஐ தமிழின அழிப்பு நினைவு நாளாக ஏற்றுக்கொண்டு தமிழ் சமுகத்துக்கான தங்கள் ஆதரவைப் பகிர்ந்துகொண்டு,​இன அழிப்பால் தமிழ் சமுகம் அனுபவித்திருந்த வேதனையையும் பேரதிர்ச்சியையும் ஏற்று அங்கீகரித்தபோது,

​​அது துயரத்தினை அனுபவித்த தமிழ் இனத்துக்கு உறுதியாக இருந்தது. இளைஞர்கள் உட்பட பலரும் சமுக ஊடகங்களில் இதற்கு நன்றியைத் தெரிவித்திருந்தனர். கல்விச் சபைகளும் மற்றும் பல்வேறு நிலைகளிலுள்ள அரச கட்டமைப்புகளும் தாங்கள் அனுபவித்த துயரத்தினை ஒப்புக்கொண்டிருப்பது எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதனை கனடியத் தமிழர்கள் பலரும் வெளிப்படுத்தியிருந்தனர்.

மேற்படி இன அழிப்பால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான தமது ஆதரவை மீளப்பெறுவதாக பீல் கல்விச்சேவை அளித்த சமீபத்திய விளக்கத்தினை கேட்டு நான் மிகுந்த ஏமாற்றமடைந்தேன். கொடுமைகள் எவையாயினும் அவற்றைச் சுட்டிக்காட்டுவதற்கு நாம் ஒருபோதும் வெட்கப்படக்கூடாது. தமிழர்களுக்கு நடைபெற்ற அநீதிகள் பல தரப்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்டது மிக முக்கியமானதென்று கருத்து வெளியிட்ட பல இளைஞர்கள் இப்போது வெளிவந்த விளக்கத்தினால் மிகவும் புண்படுத்தப்பட்டும் சோர்வுற்றும் உள்ளனர். பீல் பிராந்திய கல்விச் சபையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மாணவர்கள் கல்வி கற்பதுடன், தமிழ் சமுகத்திலிருந்து பல பணியாளர்களும் மேற்படி கல்விச் சபையில் பணியாற்றி வருகின்றனர். எனவே இவர்களின் வலியினையும் துயரத்தையும் புரிந்துகொள்ளுமாறு நான் பீல் பிராந்திய கல்விச் சபையைக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்நேரத்தில், “அநீதி நடைபெறும்போது நீங்கள் நடுநிலை வகித்தால், நீங்கள் அடக்குமுறையாளரின் பக்கதைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்” எனும் டெஸ்மண்ட் டுட்டுவின் புகழ்பெற்ற வாக்கியத்தை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இதற்காகத்தான் சட்டம்-104 என்ற தமிழ் இன அழிப்பு அறிவியற் கிழமைக்கான சட்டம் மிகவும் இன்றியமையாதது. கல்வியறிவூட்டுவதன் மூலமே என்ன நடக்கிறது என்பதை அடையாளங் கண்டு எமது மாணவர்களையும் சமுகத்தையும் பாதிப்பிலிருந்து மீண்டெழுவதற்கு உதவ முடியும். தமிழின அழிப்பின்போது நடைபெற்ற கொலைகளும் வன்முறைகளும் ஒரு கொடூரமான செயல் என்பதை பொதுவெளியில் பல தரப்புகளிலும் ஒப்புக்கொள்வது பலவற்றுக்கு முக்கியமானதாக அமைபும். இந்த ஒப்புக்கொள்ளலானது, இறந்தவர்களுக்கு மதிப்பளிப்பது மட்டுமன்றி, பாதிக்கப்பட்டு துயருற்றிருப்பவர்களுக்கு ஒரு நம்பிக்கையையும் அளிக்கக்கூடிய அவர்களின் மறுவாழ்வுக்கான முதற்படியாகும். மிக முக்கியமாக, தமிழின அழிப்பு பற்றிய கல்வியறிவூட்டல் மூலம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வைப் பேணுவதற்கான நம் அனைவரினதும் விருப்பத்தையும், இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நம் அனைவரினதும் பொறுப்பையும் இது உறுதிப்படுத்தும்.

விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர்.

ஸ்காபரோ – றூஜ் பார்க்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top