News

பொன். சிவகுமாரனின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று!

விடுதலை போராட்டத்தின் முதல் வித்து பொன். சிவகுமாரனின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். உரும்பிராய் மண்ணின் மைந்தனான பொன். சிவகுமாரன் 1974ம் ஆண்டு யூன் 5ம் திகதி மாலை 6.15 மணிக்கு உரும்பிராய் பகுதியில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சயனட் அருந்தி வீரச்சாவடைந்தார்.

அவரது 44 ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று, ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதால், நினைவேந்தல் நிகழ்வை நடத்த முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில், பொன். சிவகுமாரனின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் நாளை காலை 9.30 மணிக்கு அனுஷ்டிக்கப்படவுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

உரும்பிராய் சந்தியில் அமையப்பெற்றுள்ள அவரது உருவச் சிலை வளாகத்தில் பொது அஞ்சலிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போதைய கொரோனா சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இம்முறை உரைகள் எதுவும் இடம்பெறமாட்டாது.

உரிய சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள், சமூக இடைவெளியுடன் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை மேற்கொண்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top