Canada

CERB கொடுப்பனவினை தவறானமுறையில் பெறுபவர்களுக்கு – 5000 டாலர் அபராதம் மற்றும் சிறை… பிரதமர் அறிவிப்பு..!!

கொரோனா வைரஸ் அவசர நலனுக்காக கொடுப்பனவை (CERB) தவறான வழிகளில் பெற்றுக்கொள்கின்ற பயனாளர்களுக்கு 5,000 டாலர்கள் வரை அபராதம் விதிக்க நேரிடும்,என்றும் இவ்வாறான முறையற்ற கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்பவர்கள் பெற்றுக்கொண்ட பணத்தினை  மீள செலுத்தவேண்டி வருவதுடன் சிறைதண்டனை அனுபவிக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில் வழங்குநர்கள் மீண்டும் வேலைக்கு அழைக்கும் பட்சத்தில் மீண்டும் வேலைக்குச் செல்ல மறுப்பவர்கள் தொடர்ந்து நிதி அபராதங்களையும் சந்திக்க நேரிடும் எனவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான புதிய சட்டவரைபு இன்று (புதன்கிழமை) கனடிய மத்திய அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சட்டத்தின் வரைவு பதிப்பின் படி, தற்போதுள்ள விதிகளில் சில இடைவெளிகளை நிரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top