News

கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ்.பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்ட கரும்புலிகள் தின நினைவேந்தல்

யாழ்.பல்கலைக்கழகத்தில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கரும்புலிகள் தின நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நினைவேந்தல் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் தற்கொலை படைப்பிரிவான கரும்புலிகளின் நினைவுதினம் தமிழர் தாயக்கப்பகுதிகளில் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

 

நினைவேந்தலை யாழில் முன்னெடுக்க இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் தடைவிதித்திருந்தனர். இன்நிலையில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தடைகளையும், அச்சுறுத்தல்களையும் மீறி கரும்புலிகள் தின நினைவேந்தலை முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது கலந்து கொண்ட மாணவர்கள் நினைவுச்சுடரேற்றி , மலரஞ்சலி செலுத்தி கரும்புலிகளை நினைவு கூர்ந்துள்ளனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top