Canada

கனடாவில் குடிபோதையில் காரை ஓட்டிய பெண்ணினால் பறிபோன 8 வயது சிறுமியின் உயிர்!

கனடாவில் கார் விபத்தில் உயிரிழந்த 8 வயது சிறுமியின் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் அவர் குறித்து குடும்பத்தார் உருக்கமாக பேசியுள்ளனர்.

கனடாவின் லண்டன் நகரில் Nihal Toor (8) என்ற சிறுமி தனது தாயார், பாட்டி மற்றும் உறவினருடன் காரில் சில தினங்களுக்கு முன்னர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வேகமாக வந்த கார் Nihal Toor கார் மீது மோதியது. இதில் சிறுமி Nihal Toor படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார்.

மற்ற மூவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்கள். இவர்கள் கார் மீது மோதிய காரை குடிபோதையில் ஓட்டியதாக Alicia Van Bree (33) என்ற பெண் கைது செய்யப்பட்டார்.பின்னர் விடுவிக்கப்பட்ட Alicia Van Bree செப்டம்பர் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையில் உயிரிழந்த Nihal Toorன் இறுதிச்சடங்கு சமீபத்தில் நடைபெற்றது. அவர் குறித்து பேசிய குடும்பத்தார், மிகவும் புத்திசாலித்தனமான குணம் கொண்டவள் Nihal Toor. நடனமாடுவது, பாடுவது, கைவினைப்பொருட்களை செய்வது போன்றவற்றில் அவளுக்கு ஆர்வம் அதிகம்.

Nihal Toorக்கு மூன்று மூத்த சகோதரிகள் உள்ளனர், அவர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அவள் மரணம் எங்கள் குடும்பத்தாரை பெரும் வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது என கூறியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top