Canada

கனடாவில் சொக்லேட் கொடுத்து சிறுமியை வேனில் கடத்தி செல்ல முயன்ற மர்ம நபர்!

கனடாவில் சிறுமியை சொக்லேட் கொடுத்து கவர்ந்து பேசி வேனில் கடத்த முயன்ற நபரை பொலிசார் தேடி வருகிறார்கள். ரொரன்ரோவில் தான் இந்த சம்பவம் மூன்று நாட்களுக்கு முன்னர் நடந்துள்ளது. Dunview Avenue பகுதியில் மாலை 6 மணியளவில் சிறுமி ஒருவர் மிதிவண்டி ஓட்டி கொண்டிருந்தார்.

அப்போது வேனில் வந்த மர்ம நபர் சிறுமி அருகில் வண்டியை நிறுத்தினார். பின்னர் சிறுமியிடம் கவர்ந்து பேசி சொக்லேட் கொடுத்து தன்னுடன் வேனில் வந்து ஏறுமாறு அழைத்தார். ஆனால் சொக்லேட்டை வாங்க மறுத்த சிறுமி அங்கிருந்து உடனடியாக ஓடியுள்ளார்.

 

 

இதையடுத்து வேனில் வந்த நபரும் அங்கிருந்து சென்றுவிட்டார். இது தொடர்பாக பொலிசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பொலிசார் கூறுகையில், வெள்ளை நிற வேனில் வந்த அந்த நபருக்கு வயது 40களில் இருக்கும், இந்த சம்பவம் தொடர்பாகவும், அந்த மர்ம நபர் தொடர்பாகவும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top