News

கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் தாக்குதல்!

 

யாழில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டம் ஒன்றில் போது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுழிபுரம் கல்விளான் பகுதியில் நேற்று இரவு நடந்த கூட்டத்திலேயே இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
குறித்த பிரசார கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரும், யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் கலந்து கொண்டிருந்தார்.
மக்களோடு மக்களாக பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட சில விசமிகளால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இத்தாக்குதல் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
தாக்குதல் நடத்தியவர்களை மக்கள் மடக்க முயன்ற போதும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top