News

சிவாஜிலிங்கம் கைதாகி பிணையில் விடுவிப்பு!

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், இன்று அவரது வீட்டில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 9.30 மணியளவில் வல்வெட்டித்துறையிலுள்ள எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வீட்டுக்குச் சென்ற, பொலிசார், அவரைக் கைது செய்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

 

 

2018ஆம் ஆண்டு மாவீரர் நாளை அனுசரித்தது தொடர்பாக, பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காத நிலையில், பருத்தித்துறை நீதிவானின் கட்டளையின் பேரில், எம்.கே.சிவாஜிலிங்கம், கைது செய்யப்பட்டிருந்தார்.

எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பின்னர், பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் முன்பாக, பொலிசாரால் நிறுத்தப்பட்டார்.

இதையடுத்து, எம்.கே.சிவாஜிலிங்கத்தை எச்சரிக்கை செய்த பருத்தித்துறை நீதிவான் அவரை பிணையில் செல்ல அனுமதித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top