Canada

ஜேன் மற்றும் பிஞ்சில் 14 வது மாடி குடியிருப்பில் இருந்து விழுந்து இரண்டு வயது சிறுவன் பலி!

ரொரன்றோவில்  ஜேன் மற்றும் பிஞ்ச் சுற்றுப்புறத்தில் 14 வது மாடி பால்கனியில் அல்லது ஜன்னலிலிருந்து விழுந்து ஒரு குறுநடை போடும் குழந்தை இறந்துவிட்டது.

நேற்று  மாலை 5:24 மணிக்கு டிரிஃப்ட்வுட் அவென்யூ மற்றும் யார்க்வுட்ஸ் கேட் பகுதியில் உள்ள 14 வது மாடி கட்டிடத்தின்  அருகே  இரண்டு வயது குழந்தை ஒன்று படுகாயமடைந்த நிலையில் கிடப்பதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர் பதறிப்போய் பொலிசாரை அழைத்துள்ளார்.

உடனடியாக அங்கு விரைந்த மருத்துவ உதவிக்குழுவினர் அவனை அவசர சிகிச்சை மையம் ஒன்றிற்கு கொண்டு சென்றுள்ளனர்.ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த 2 வயது சிறுவன் பரிதாபமாக பலியாகியுள்ளான்.

அவன், பக்கத்தில் இருக்கும் 14 மாடிக் கட்டிடத்திலிருந்து விழுந்ததாக தாங்கள் கருதுவதாக தெரிவித்துள்ள நிலையில், அவன் பால்கனியிலிருந்து விழுந்தானா அல்லது ஜன்னலிலிருந்து விழுந்தானா என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

கீழே விழுந்த சிறுவன், எப்போது விழுந்தான், அவன் எவ்வளவு நேரமாக அங்கேயே விழுந்துகிடந்தான் என எந்த விவரமும் தற்போதைக்கு தெரியவில்லை. அந்த சிறுவனின் தாய்க்கு நடந்த சம்பவம் குறித்து தெரியும் என்றும், அவரும் மகனுடன் மருத்துவமனையிலிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அக்கம் பக்கத்திலுள்ள கட்டிடங்கள் எதிலாவது CCTV கமெராக்கள் இருக்குமா என தேடி வரும் பொலிசார், இந்த சம்பவத்தை சந்தேகத்திற்குரியதாக கருதுவதாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். யாருக்காவது இந்த சம்பவம் குறித்து தெரிந்தால் தங்களுக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top