News

 தென் கொரியாவின் சியோல் நகர மேயர் பார்க் வான் சூன் சடலமாக மீட்பு!

தென் கொரியாவின் சியோல் நகர மேயர் பார்க் வான் சூன் திடீரென்று மாயமான நிலையில், தற்போது சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சியோல் நகர மக்களால் மூன்று முறை மேயராக தெரிவு செய்யப்பட்ட பார்க் வான் சூன், வியாழனன்று திடீரென மாயமானார். தமது அரசாங்க இல்லத்தில் இருந்து வெளியேறும் முன்னர் மகளிடம், உயில் ஒன்றை தயார் செய்துள்ளதாக கூறிவிட்டு சென்றதாக அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

இதனிடையே, தந்தை வெகு நேரமாக திரும்பாத நிலையில், பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார் பார்க்கின் மகள். இதனையடுத்து சியோல் நகர பொலிசார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், அவரது உடல் சியோலின் வடக்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக தேசிய செய்தி நிறுவனம்   தெரிவித்துள்ளது.

 

 

இதனிடையே, வெள்ளிக்கிழமை முன்னெடுக்க திட்டமிட்டிருந்த மிக முக்கியமான கூட்டம் ஒன்றை அவர் ரத்து செய்துள்ளதும் தற்போது வெளிவந்துள்ளது. பார்க் காணாமல் போனதற்கான காரணங்கள் இதுவரையில் வெளியாகவில்லை. தென் கொரிய ஊடகங்களில், பார்க் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுடன் இது தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

ஒரு முன்னாள் ஊழியர் சமீபத்தில் பார்க் மீது புகார் அளித்து, காவல்துறையினரால் விசாரிக்க புதன்கிழமை ஆஜரானார். ஆனால் குறித்த தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. 64 வயதான பார்க் முன்பு மனித உரிமை வழக்கறிஞராக பணியாற்றியவர் மற்றும் பல ஆண்டுகளாக ஒரு சிவில் உரிமை அமைப்பிலும் பணியாற்றினார். அக்டோபர் 2011 இல், அவர் சியோல் மேயருக்கான சுயாதீனமான வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டார்.

 

 

பார்க் பின்னர் ஜனாதிபதி மூன் ஜே இன் தற்போதைய சமூக ஜனநாயகக் கட்சியில் சேர்ந்தார். மட்டுமின்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாவது முறையாக சியோல் நகர மேயராக பார்க் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். 2022 இல் திட்டமிடப்பட்டுள்ள அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான சாத்தியமான வேட்பாளராகவும் பார்க் கருதப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top