News

பழி வாங்குவேன்… பிரான்சில் மூளைசாவடைந்த ஓட்டுனரின் மனைவி சபதம்!

பிரான்சில் மாஸ்க் அணியும் படி பயணிகளை கோரியதால், ஓட்டுனர் மூளைச்சாவடைந்த சம்பவத்தில், அவரின் மனைவி மனைவி என் கணவருக்காக பழி வாங்குவேன் என்று கூறியுள்ளார்.

பிரான்சின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பயோன் நகரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பேருந்து ஓட்டுனர் Philippe Monguillot மாஸ்க் அணிய கோரியதால் பயணிகளால் கொடூரமாக தாக்கப்பட்ட மூளைசாவடைந்தார்.

 

 

இந்நிலையில், Philippe Monguillot-ன் மனைவி Veronique Monguillot மற்றும் தம்பதியின் மூன்று மகள்கள், புதன்கிழமை மாலை பிரான்சின் தெற்கில் உள்ள பயோனில் ஆயிரக்கணக்கான மக்களுடன் சேர்ந்து நீதி கேட்டு தெருக்களில் அணிவகுத்துச் சென்றனர்.

 

 

இந்த அணி வகுப்பில் மனைவி கணவரின் புகைப்படத்தை வைத்திருந்தார். அதே நேரத்தில் மகள்கள் வெள்ளை நிற பெரிய பூங்கொத்துக்களை வைத்திருந்தனர்.   Veronique Monguillot கூறுகையில், நான் இறுதிவரை போராடுவேன், எனக்கு வலிமை இருக்கிறது, எனக்கு இன்னும் அழுவதற்கு கண்ணீர் இல்லை. நான் கோபமாக இருக்கிறேன், நான் பயப்படவில்லை, நீதி என்னுடன் இருக்கிறது. என் கணவரின் மரணத்திற்கு பழிவாங்க நீதி எனக்கு உதவும் என்று கூறியுள்ளார்.

 

 

Paris, Strasbourg மற்றும் Bordeaux, உள்ளிட்ட நகரங்களில், பேருந்து ஓட்டுனர்கள் இரவு 7.30 மணிக்கு ஒரு நிமிடம் மெளனம் காத்தனர். Philippe Monguillot இறுதிச் சடங்கிற்குப் பிறகு அவரது சக ஊழியர்கள் சிலர் மீண்டும் வேலைக்குச் செல்ல மறுத்து வருகின்றனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக 22 மற்றும் 23 வயதுடைய இருவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top