Canada

மொன்றியல் வீட்டுத் தீவிபத்தில் உயிரிழந்த தமிழ் சிறுமி குறித்த விபரங்கள் வெளியாகின

மொன்றியல் பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவர் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்று முந்தினம் காலை  மொன்றியல் பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். அவர் மொன்றியலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசங்கரி சிவராமன் என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக   பொலிஸார் கூறியுள்ளனர்.

தீவிபத்து ஏற்பட்ட வீட்டின் அடித்தளத்தில் சிக்கிய குறித்த சிறுமி தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீக்காயங்கள் மற்றும் புகையை சுவாசித்தமை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

இதன் போது உயிரிழந்த சிறுமியின் 18 வயதான சகோதரி,   10 வயதாக சகோதரனும் இருந்துள்ளனர்.  எனினும், அவர்கள் இருவரும் அத்தருணத்தில் பாதுகாப்பான இடத்திற்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 2ம் திகதி  2020 காலை 9;30 மணிக்கு Rideau Memorial Gardens & Funeral Home 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, QC H9B 2A6, Canada என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top