Canada

ரகசியமாக ஒன்லைனில் ரசாயன ஆயுதம் வாங்க முயன்ற கனேடிய இளம்பெண் கைது

கனேடிய இளம்பெண் ஒருவர் ரகசியமாக ஒன்லைனில் ரசாயன ஆயுதம் ஒன்றை வாங்க முயன்றபோது பொலிசார் விரித்த வலையில் சிக்கினார்.

ஆனால், தான் ரசாயன ஆயுதம் வாங்குவதற்காக தொடர்புகொண்டது ரகசிய பொலிசார் ஒருவரை என்பது அவருக்கு தெரியாது. வின்னிபெக்கைச் சேர்ந்த Sijie Liu (37) என்பவர் dark web எனப்படும் சட்டவிரோத குற்றங்கள் நடைபெறும் இணையம் வாயிலாக ஒருவரை தொடர்புகொண்டு ரசாயன ஆயுதம் ஒன்றை வாங்க முயன்றுள்ளார்.

ஒரு மாதம் கழித்து மனிட் டோபாவில் கனடா அமெரிக்க எல்லையைக் கடந்த Liu, எல்லை அதிகாரிகளிடம் ஷாப்பிங் செல்வதாக தெரிவித்துள்ளார். அவர் சிறிது தூரம் பயணித்து தான் ஆர்டர் செய்த பொருட்களை கையெழுத்திட்டு வாங்கவும், தயாராக காத்திருந்த எஃப்.பி.ஐ அதிகாரிகள் அவரை கைதுசெய்தனர்.

அமெரிக்காவின் North Dakota மாகாண நீதிமன்றம் அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. தற்போதைக்கு அமெரிக்காவில் சிறையிலடைக்கப்பட்டுள்ள Liu, பின்னர் கனடாவுக்கு கொண்டுவரப்பட்டு அங்கு தனது மீதி தண்டனைக் காலத்தைக் கழிக்கவேண்டும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top