Canada

 வின்னிபெக்கில் நெடுஞ்சாலையில் வாகன விபத்தில் 13 வயது சிறுமி பலி

கனடாவில் நெடுஞ்சாலையில் நடந்த வாகன விபத்தில் 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வின்னிபெக்கில் உள்ள நெடுஞ்சாலையில் தான் திங்கட்கிழமை பகல் உள்ளூர் நேரப்படி 2.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. இரண்டு வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் ஒரு காரில் இருந்த 13 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அந்த காரில் இருந்த 36 வயது பெண் மற்றும் 10 வயது சிறுவன் ஆகியோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களின் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என தெரியவந்துள்ளது.

மற்றொரு காரில் இருந்த 44 வயது நபர் சிறிய காயங்களுக்கு சிகிச்சை பெற்றார். மது அருந்திவிட்டு கார் ஓட்டியதால் விபத்து ஏற்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது..

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top