Canada

ஸ்கார்பாரோவில் 500 பவுண்டுகளுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டதை அடுத்து 6 பேர் கைது!

ஸ்கார்பாரோவில்  ஒரு தேடுதல்  நடவடிக்கையில் 500 பவுண்டுகளுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டதை அடுத்து ஆறு பேர் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர் என்று டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மார்க்கம் சாலை மற்றும் மெக்னிகல் அவென்யூ பகுதியில் கஞ்சா வளர்ப்பது குறித்து சமூக உறுப்பினர்கள் புகார் அளித்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை மாலை 4:30 மணியளவில், அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை பிரிவில் ஒரு தேடல் வாரண்டை நிறைவேற்ற உள்ளே சென்ற போது  “ஒரு மர்வான (marijuana ) விநியோக நடவடிக்கையின் சான்றுகளை” கண்டறிந்தனர். 2.3 மில்லியன் டாலர் வீதி மதிப்புள்ள 510 பவுண்டுகள்  மர்வான பைக்கற்றுக்களை புலனாய்வாளர்களால் கைப்பற்றப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

இதையடுத்து 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

33 வயதான மில்டன் குடியிருப்பாளர்  Kiu Chen , 33 வயதான மார்க்கம் குடியிருப்பாளர் Wei Gao  ,   27 வயதான ஸ்கார்பாரோவில் வசிப்பவர் Hang Jian ,  33 வயதான விட்பி குடியிருப்பாளர்Shuai Li , 32 வயதான ஸ்கார்பாரோகுடியிருப்பாளர்  Hao Liu, மற்றும்  33 வயதான ஸ்கார்பாரோவைச் சேர்ந்த  Yun Ni- ஆகியோர் மீது கஞ்சா சட்டத்தின் கீழ் விநியோகிக்கும் நோக்கத்திற்காக   கஞ்சா வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் அக்., 8 ல் ஓல்ட் சிட்டி ஹாலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top