News

யாழ்ப்பாணத்தில் கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல்கள்

கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு, யாழ். பல்கலைக்கழக்க மாணவர்களின் ஒருங்கிணைப்பில், பல்கலைக்கழக வளாகத்தில், இன்று நடைபெற்றது. இதன் போது படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

 

அதேவேளை, வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் கறுப்பு ஜூலை நினைவேந்தல், இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபை வளாகத்தில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில், சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் ஒன்றுகூடினர்.

 

 

அஞ்சலி செலுத்துவதற்கான பொது ஈகைச்சுடர் தவிசாளரினால் ஏற்றப்பட்டதுடன், பிரதேச சபையின் உறுப்பினர்கள் கைகளில் மெழுவர்த்தியை ஏந்தியவாறு அஞ்சலித்தனர்.

தொடர்ந்து இனியொரு கறுப்பு ஜூலை வேண்டாம், இனவாதம் அரச இயந்திரம் முதல் சிவில் சமூகங்கள் வரையில் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் என்ற தொனிப்பொருளில் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உரைகள் இடம்பெற்றது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top