News

எமது வரலாற்றை நாம் தெரிவிப்பது சிங்களத் தலைவர்களுக்கு ஏன் கொதிப்பினை ஏற்படுத்துகிறது : சிவாஜிலிங்கம்

எங்களுடைய வரலாற்றை, விருப்பங்களை தெரிவிப்பது சிங்களத்தலைவர்களுக்கு சீற்றத்தை ஏற்படுத்தினால் அவர்கள் எங்களை விட்டுவிட வேண்டுமென தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் செயலாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வின் போது தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் சிங்கள அரசியல் வட்டாரங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பில் சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். நாடாளுமன்ற உரையின் போது விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் பெளத்த சிங்கள இனவாதிகளை கொதித்தெழ வைத்துள்ளது. எங்களுடைய வரலாற்றை, விருப்பங்களை, நிலைமைகளை தெரிவிப்பது சிங்களத்தலைவர்களுக்கு சீற்றத்தை ஏற்படுத்தினால் அவர்கள் எங்களை விட்டுவிட வேண்டும்.

இதன்மூலம் நீங்கள் உங்கள் வழியைப்பாருங்கள் , நாங்கள் எங்கள் வழியைப்பார்க்கிறோம் என்ற செய்தியைத்தான் நீங்கள் சொல்லுகின்றீர்களா என்ற கேள்வியெழுகிறது. இனவாதிகள் இனவாத நடவடிக்கைகளை கைவிட்டு சமாதானம், இன ஒற்றுமை, தேசிய நல்லிணக்கப்பாதையை நோக்கிப் பயணித்தால் அதற்கான ஆதரவை நாம் வழங்குவோம் என்று கூறியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top