News

ஒற்றையாட்சியை ஏற்றுத்தான் நாடாளுமன்றம் செல்ல முடியும்: கஜேந்திரகுமார்

இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொள்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலாம் தெரிவித்துளளார்.

இன்று தனியார் தொலைக்காட்சியின் குறித்த அரசியல்  விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.  அவர் மேலும் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒற்றையாட்சியை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்யாமல், யாரும் நாடாளுமன்றம் சென்று மக்களின் குரலை பதிவு செய்ய முடியாது.

நாங்கள் தமிழீழத்தை பற்றி பேசவில்லை 6வது திருத்தம் இருக்கும் வரை நாம் தமிழீழ தனிநாட்டை கோர முடியாது. தமிழர்கள் ஒரு தேசமாக இருப்பதை அங்கீகரிக்காமல் இருப்பதே பிரச்சனைக்கு காரணம். தமிழ் தேசத்தை அங்கீகரிப்பதே தீர்வாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

ஒற்றையாட்சியை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்யாமல், யாரும் நாடாளுமன்றம் சென்று மக்களின் குரலை பதிவு செய்ய முடியாது. அதற்குள் போய் நீங்கள் எதைக் கதைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். நாங்கள் தமிழீழத்தை பற்றி பேசவில்லை. 6வது திருத்தம் இருக்கும் வரை நாம் தமிழீழ தனிநாட்டை கோர முடியாது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ கோர முடியாது.

தனிநாடு கோர முடியாவிட்டாலும், ஒரு தனிநாடு ஏன் அவசியமாக இருக்கிறது என்பதை பார்த்தால், கடந்த 72 வருடமாக தமிழர்கள் ஒரு தேசமாக இருப்பதை அங்கீகரிக்காமல் இருப்பதே பிரச்சனைக்கு காரணம். தமிழ் தேசத்தை அங்கீகரிப்பதே தீர்வாக இருக்கலாம்.

இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசு அமைந்து விட்டது. அந்த தரப்பு வேறு எவரையும் திரும்பிப் பார்க்க வேண்டிய தேவையில்லை. ஆனால் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும்.

பொறுப்புக்கூறல் விவகாரத்தை மிக தீவிரமாக முன்கொண்டு செல்லப் போகிறோம். இன்று அதிகாரத்திலுள்ளவர்கள் மீது போர்க்குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவற்றை முன்கொண்டு செல்லும்போது, தனிப்பட்டரீதியில் அவர்களிற்கு நெருக்கடி ஏற்படும் என மேலும் தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top