News

சோமாலியாவில் பயங்கரம்; ராணுவ தளத்தில் கார் குண்டுவெடிப்பு -8 வீரர்கள் உடல் சிதறி பலி

வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியே அதிர்ந்து கரும்புகை மண்டலம் உருவானது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவர்கள் ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் வெளிநாட்டு பயணிகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன.பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்க ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டுப் படைகள் கடுமையாக போராடி வருகின்றன.
இந்த நிலையில் தலைநகர் மொகாதிசுவில் உள்ள ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் பயங்கர குண்டு வெடிப்பை நிகழ்த்தினர்.மொகாதிசுவின் வார்ட்டா நப்பாடா மாவட்டத்தில் உள்ள ராணுவ தளத்தின் நுழைவாயிலுக்கு அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை நிறுத்தி பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இதில் வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியே அதிர்ந்து கரும்புகை மண்டலம் உருவானது.

இந்த குண்டு வெடிப்பில் ராணுவ தளத்தின் நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 8 ராணுவ வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 14 வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தி இருப்பார்கள் என சோமாலியா அரசு குற்றம் சாட்டியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top