Canada

டவுன்டவுன் ஸ்ட்ரிப் கிளப் ஊழியருக்கு கொரோனா!- 500 பேருக்கு மேல் தொற்றியிருக்கலாம்.

ரொறன்ரோவில், உள்ள வயது வந்தோருக்கான பொழுதுபோக்கு கிளப்பின்   ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அங்கு சென்றிருந்த, 550 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்று பொது சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

ரொறன்ரோ பொது சுகாதார அதிகாரிகளின் தகவல்களின் படி, Yonge மற்றும் Bloor வீதிகளுக்கு அருகில் அமைந்துள்ள Brass Rail Tavern, இன் ஊழியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர், ஆகஸ்ட் 4 ( காலை 7 மணி முதல் ஆகஸ்ட் 5 2:30 மணி வரை), ஆகஸ்ட் 5 (இரவு 8 மணி முதல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி 3 மணி வரை), ஆகஸ்ட் 7 (இரவு 9 மணி முதல் ஆக 8 அதிகாலை 3 வரை), ஆகஸ்ட் 8 (மாலை 7 மணி முதல் ஆகஸ்ட் 9 வரை 2:30 மணி முதல் ). பணியாற்றியுள்ளார்.

முன்னெச்சரிக்கையாக, இந்த தேதிகள் மற்றும் நேரங்களில் Brass Rail Tavern கலந்து கொண்ட எவரும், இந்த காலகட்டத்தில் கடைசி வருகைக்குப் பின்னர் 14 நாட்களுக்கு கொரோனா அறிகுறிகளைக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top