News

நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள 69 ஆயிரம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்

பொதுத்தேர்தல் கடமைகளின் போது பாதுகாப்புக்காக 69ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதற்கு மேலதிகமாக சிறப்பு அதிரடிப்படையினரும், கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

சிவல் படையினர் 10500 பேர் கடமைகளில் ஈடுபடுத்தப்படுகின்ற நிலையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இராணுவத்தினரின் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.

பொலிஸார் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ளமையால் பொலிஸ் நிலையங்களின் பாதுகாப்புக்கு இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை 2015ஆம் ஆண்டைக்காட்டிலும் இந்தமுறை தேர்தல் வன்முறைகள் குறைந்திருந்ததாக தரவுகள் வெளிக்காட்டியுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top