News

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகளின் தடை நீடிப்பிற்கு முக்கிய ஆதாரமாகும் சுமந்திரன் தொடர்பான சம்பவம்

புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகளின் தடை தொடர்வதற்கு சுமந்திரன் தொடர்பான ஒரு விடயமும் காரணமாக இருப்பதாக பிரித்தானிய சட்ட வல்லுனர்கள் நீதிமன்றில் வாதிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமந்திரன் கொலை செய்யப்படலாம் என்று கூறி, சுமந்திரனுக்கு சிறிலங்கா அரசாங்கம் விசேட அதிரடிப் படை பாதுகாப்பை சுமந்திரனுக்கு வழங்கிவருவது யாவரும் அறிந்ததே. இந்த விடயம், பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளின் தடையை நீக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டநடவடிக்கைளுக்கு பெரிதும் பாதகமாக இருப்பதாக, பிரித்தானிய சட்ட வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளின் தடையை நீக்குவது தொடர்பாக நடைபெற்றுவருகின்ற முக்கியமான வழக்கு விசாரணைகளில் புலிகள் தற்போதும் இயங்கி கொண்டிருப்பதாகவும் அவர்கள் இயங்க முயற்சிகளை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டு அது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த தடையை நீக்குமாறு கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், பிரித்தானிய உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்த வேளை, உள்துறை அமைச்சர் அந்த கோரிக்கையை நிராகரித்திருந்தார்.

இதனையடுத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. >இந்த வழக்கு விசாரணை ஜீலை மாதம் 28, 29 , 31 ம் திகதிகளில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, விடுதலைப் புலிகளின் தடையை நீக்க முடியாது என்பதற்கான காரணங்களையும் பிரித்தானிய அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்வைத்ததிருந்தன.

அந்தக் காரணங்களுக்கு வலுவூட்டும் வகையில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை இலங்கையில் நடைபெற்ற 6 சம்பவங்களை அவர்கள் மேற்கோள்காட்டியுள்ளதுடன் அந்த சம்பவங்களுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்புள்ளதாகவும் கூறியுள்ளனர். அதற்கு ஆதாரமாக சிறிலங்கா புலனாய்வு துறையினரின் அறிக்கைகளையும் பிரித்தானிய அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளனர்.

அந்த ஆறு சம்பவங்களில் பிரதானமாக சுமந்திரனை கொலைசெய்வதற்காக முயற்சிகளில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருந்தனர் என்பது முக்கியமானது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்தாக குற்றம் சுமத்தி, புலிகளின் நான்கு முன்னாள் உறுப்பினர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இவர்களை இந்த திட்டத்திற்கு அமர்த்தியதாக கூறப்பட்டது. விடுதலைப் புலிகள் போர் குற்றம் செய்தனர் என்றும், புலிகள், முஸ்லிம்களை வடக்கில் இருந்து வெளியேற்றியது தவறானது எனவும், அது ஒரு இன சுத்திகரிப்பு நடவடிக்கை எனவும் சுமந்திரன் கூறியதால், அவரை கொலை செய்ய புலிகள் திட்டமிட்டதாகவும், கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து கிளைமோர் குண்டுகள் மற்றும் டெட்டனேட்டர்களை கைப்பபற்றியதாகவும், பிரித்தானிய பிரித்தானிய உள்துறை செயலாளரின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

சுமந்திரன் மீதான தாக்குதல் முயற்சி உட்பட 6 சம்பவங்களே, பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான் தடை நடிக்கப்படுவதற்கான ஆதாரங்களாக நீதிமன்றத்தில் வாதங்களாக முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top