News

பெய்ரூட்டை விட மிக மோசமான பேரழிவு: இன்னொரு முக்கிய நகரம் மீது எச்சரிக்கும் நிபுணர்கள்

தெஹ்ரானின் மோசமாக பராமரிக்கப்படும் எண்ணெய் கிடங்குகளால் பெய்ரூட்டை விட பல மடங்கு பேரழிவிற்கு ஈரான் வழி வகுப்பதாக அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய தெஹ்ரான் நகர சபை உறுப்பினர் மஜித் ஃபராஹானி, ஷஹ்ரான் எண்ணெய் கிடங்கு பகுதியானது எப்போது வேண்டுமானாலும் வெடிக்க காத்திருக்கும் ஹைட்ரஜன் குண்டு என்று எச்சரித்தார், ஆனால் அது தொடர்பில் யாரும் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் மெத்தனத்தால் பெய்ரூட் நகரம் மொத்தமாக சேதமடைந்துள்ளதை குறிப்பிட்டு எச்சரித்த மஜித் ஃபராஹானி, ஈரானில் எண்ணெய் குழாய் இணைப்புகள், ரசாயன ஆலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் மர்மமான தொடர் விபத்துகள் சமீப காலமாக ஏற்பட்டுவருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

தெஹ்ரானின் புறநகர்ப்பகுதியான ஷஹ்ரானில் அமைந்துள்ள இந்த எண்ணெய் கிடங்கு ஒரு ஹைட்ரஜன் குண்டு என குறிப்பிட்ட அவர், இங்கிருந்து ஒவ்வொரு நாளும் ஒன்பது மில்லியன் லிற்றர் எண்ணெய் வெளியே அனுப்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார், மேலும் 300 டேங்கர்கள் ஒவ்வொன்றும் 30,000 லிற்றர் திறன் கொண்டவை இதற்கு பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

ஜன்னத் அபாத், ஹெசரக் மற்றும் ஷரன் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெறும் சில நூறு மீற்றர் தொலைவில் 11 பெரிய எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் அமைந்துள்ளது. 8.7 மில்லியன் மக்கள்தொகை கொண்ட தெஹ்ரானும் பெய்ரூட் போன்றே ஊழல் மற்றும் அலட்சிய போக்கால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top