News

மீன், இறைச்சியில் கொரோனா..! ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டறிந்த உண்மை

>உறைபனியில் வெப்பநிலையில் இருக்கும் இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றில் கொரோனா வைரஸ் 21 நாட்கள் இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட்டில் உள்ள மீன், கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி ஆகியவற்றில் கொரோனா வைரஸ் செலுத்தப்பட்டுள்ளது.

பின்னர் அவை 4 டிகிரி செல்சியஸ் மற்றும் -20 டிகிரி செல்சியஸ்க்கு இடையில் நிலையான குளிர்பதன வெப்பநிலையில் வைக்கப்பட்டன. 21 நாட்களுக்கு பிறகு சேமித்து வைக்கப்பட்ட மீன், கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.அப்போது அவை அனைத்திலும் கொரோனா வைரஸ் உயிர்ப்புடன் இருந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிராந்தியங்களில் கொரோனா வெடிப்புகள் மீண்டும் தோன்றுவதற்கு விளக்கம் கண்டறியும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top