News

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை விசாரணைக்கு அழைத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விசாரணைகளுக்கு ஆஜராகுமாறு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், இந்த ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, முன்னாள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஆகியோருக்கு அந்த பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் ருவான் விஜேவர்தன நாளைய தினம் ஆஜராக உள்ளதுடன் ரணில் விக்ரமசிங்க மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் எதிர்வரும் 21ஆம் திகதி ஆஜராக உள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top